‘மாஸ் ஜாத்ரா’ படக்குழுவை இணையம் மீம்ஸில் “வறுத்து எடுத்தது”
ரவி தேஜா நடித்துள்ள ‘மாஸ் ஜாத்ரா’ திரைப்படக் குழுவினர் தற்போது சமூக வலைதளங்களில் கடுமையான கிண்டலுக்கு இலக்காகி வருகின்றனர்.
பானு போகவரப்பு இயக்கத்தில் ரவி தேஜா, ஸ்ரீலீலா, நவீன் சந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம், வெளியீட்டுக்கு முன் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரவி தேஜா முழுத்தரம் கொண்ட மாஸ் கமர்ஷியல் படத்தில் நடிப்பதால் ஆர்வம் அதிகமாக இருந்தது. படத்தை நாக வம்சி தயாரித்தார்.
எப்போதும் தன்னுடைய பேச்சால் சர்ச்சையில் சிக்கிவிடும் நாக வம்சி, இந்த படத்திலும் அதே நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். ‘மாஸ் ஜாத்ரா’ வசூல் எதிர்பார்ப்பை எட்டாமல் தாழ்வாக உள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், சமீபத்தில் அவர் தயாரித்த படங்கள் தொடர்ந்து வசூலில் தோல்வி அடைந்துள்ளன.
பத்திரிகையாளர் சந்திப்பில் மூத்த நடிகர் ராஜேந்திர பிரசாத், “இந்த படத்தை பார்த்து உங்களுக்கு அதிர்ச்சி வரவில்லை என்றால், நான் சினிமாவை விட்டு வெளியேறி விடுவேன்” என்று கூறியிருந்தார். தற்போது இந்த பேச்சே இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசன்கள் இந்த கருத்தை வைத்து படத்தைக் கிண்டல் செய்து பல மீம்ஸ்களை உருவாக்கி வருகிறார்கள். கூடுதலாக, ராஜேந்திர பிரசாத் நடித்த காட்சிதான் படத்துக்கு மிகப்பெரிய குறை என்று ட்றோல் செய்பவர்களும் உள்ளனர்.