’சூர்யா 47’ அப்டேட்: நஸ்லின் ஒப்பந்தம்
ஜீத்து மாதவன் இயக்கும் ‘சூர்யா 47’ படத்துக்கான தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை சூர்யா தொடங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. டிசம்பரில் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில், கதாபாத்திரங்களுக்கான நடிகர் தேர்வு பணியும் தீவிரமாக நடக்கிறது.
இந்நிலையில், ஃபஹாத் பாசில், நஸ்ரியா ஆகியோருடன் சேர்ந்து நடிகர் நஸ்லினும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘லோகா’, ‘பிரேமலு’ போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்ற நஸ்லின், தமிழ் சினிமாவில் நடிக்கும் முதல் படம் இதுவாகும்.
தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் நடுவிலான எல்லைப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறும். இதில், சூர்யா கொதிக்கும் காவல் அதிகாரியாக புதிய கெட்டப் மற்றும் நடிப்பில் தோன்ற உள்ளார். இதுபோன்ற கதாபாத்திரம் அவர் முன்னர் நடிக்காததாக கூறப்படுகிறது.