பிற்படுத்தப்பட்டோருக்கு 42% இடஒதுக்கீடு கோரி தெலங்கானாவில் பந்த்
பிற்படுத்தப்பட்டோருக்கான 42 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி தெலங்கானா முழுவதும் நேற்று பந்த் நடத்தப்பட்டது.
இந்த பந்த் போராட்டத்தில் ஆளும் காங்கிரஸ், பாஜக, பிஆர்எஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பல சமூக, அரசியல் இயக்கங்கள் இணைந்து பங்கேற்றன.
பந்த் காரணமாக மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டன. இதனால் தீபாவளி மற்றும் வார இறுதி விடுமுறையை கொண்டாட வெளிமாநிலங்களுக்கும், பிற நகரங்களுக்கும் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
பந்த் குறித்து முன்னதாக அறிவிப்பை அறியாத பொதுமக்கள் பலர் பேருந்து நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருந்தனர், இதனால் போக்குவரத்து நிலையங்களில் பெரும் நெரிசலும் குழப்பமும் ஏற்பட்டது.