“1964 நேருவின் இறுதிச்சடங்கில் நேரில் வந்த நேதாஜி!” – மே 27 நேரு நினைவு தினத்தில் பகிரப்படும் பரபரப்பான வரலாற்றுப் பதிவு
சென்னை:
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினமான இன்று (மே 27), நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மறைவு குறித்த ஒரு விசித்திரமான மற்றும் பரபரப்பான வரலாற்றுத் தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. கடந்த 1945ஆம் ஆண்டு தைவானில் நடந்த விமான விபத்திலேயே நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இறந்துவிட்டதாக அப்போதைய நேரு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து வந்தது. ஆனால், அதனை மறுக்கும் விதமாக, நேதாஜி 1945-ல் இறக்கவில்லை என்றும், அவர் பத்தாண்டுகளுக்கு மேலாக ரகசியமாக வாழ்ந்து வந்தார் என்றும் ஒரு தரப்பினர் தொடர்ந்து வாதிட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, கடந்த 1964ஆம் ஆண்டு மே 27 அன்று ஜவஹர்லால் நேரு மறைந்தபோது, எங்களது புரட்சித் தலைவன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நேரில் நேருவின் இறுதிச்சடங்கிற்கு வந்து அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார் என்ற ஒரு தகவல் இன்று நினைவு கூரப்பட்டு வருகிறது. நேரு அரசு சொன்ன விபத்துச் செய்தி பொய் என்பதை உடைக்கும் விதமாக, 1964 மே 27 அன்று நேருவின் இறுதி அஞ்சலியில் நேதாஜி கலந்து கொண்ட தினம் இன்றுதான் எனக் குறிப்பிட்டு, நேதாஜியின் ஆதரவாளர்களும் நெட்டிசன்களும் இந்தத் தகவலை இணையத்தில் பகிர்ந்து விவாதங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.





