சமூக வலைதள அவதூறு பதிவு: ஶ்ரீவில்லிபுத்தூரில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்

Date:

சமூக வலைதள அவதூறு பதிவு: ஶ்ரீவில்லிபுத்தூரில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்

ஶ்ரீவில்லிபுத்தூரில் வழக்கறிஞரைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறான பதிவை வெளியிட்டவரை கைது செய்யக் கோரி, வழக்கறிஞர்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியல் நடத்தினர்.

கோட்டைபட்டி பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் விருதுநகர் மாவட்ட வழக்கறிஞர் சங்க பொருளாளர் சதீஷ்குமார், தனது குடும்பத்தைப் பற்றி முத்துகிருஷ்ணன் எனும் நபர் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் வெளியிட்டதாக போலீசில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, முத்துகிருஷ்ணனை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது, இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த முத்துகிருஷ்ணன் நெஞ்சு வலியை தெரிவித்ததால், மருத்துவர்கள் சிறைத் தண்டனைக்கான உடல்நலம் சான்றிதழ் வழங்க மறுத்தனர்.

இந்த நிலையில், குற்றவாளியை உடனடியாக கைது செய்யக் கோரி, விருதுநகர் மாவட்ட வழக்கறிஞர் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் ஶ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர், ஶ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நிலைமை சமணப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

உயிர் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டால் ஊராட்சி தலைவர் பொறுப்பு – பெண் அளித்த புகார்

உயிர் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டால் ஊராட்சி தலைவர் பொறுப்பு – பெண்...

மதுரை எல்ஐசி அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து – பெண் கிளை மேலாளர் உயிரிழப்பு

மதுரை எல்ஐசி அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து – பெண் கிளை...

திமுக ஆட்சியால் தமிழகம் ரூ.8 லட்சம் கோடி கடன் சுமையில் சிக்கியுள்ளது – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

திமுக ஆட்சியால் தமிழகம் ரூ.8 லட்சம் கோடி கடன் சுமையில் சிக்கியுள்ளது...

சீன ஜிபிஎஸ் சாதனம் பொருத்தப்பட்ட சீகல் கடற்பறவை கண்டுபிடிப்பு – பாதுகாப்பு வட்டாரங்களில் பரபரப்பு

சீன ஜிபிஎஸ் சாதனம் பொருத்தப்பட்ட சீகல் கடற்பறவை கண்டுபிடிப்பு – பாதுகாப்பு...