நேபாளத்தில் கோர விபத்து: ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 17 பேர் பலி – மீட்புப்பணிகள் தீவிரம்!
காத்மாண்டு: நேபாளத்தில் பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 17 பேர் உயிரிழந்தனர். மேற்கு போகாராவிலிருந்து நேபாளத் தலைநகர் காத்மாண்டுவை நோக்கி 44 பயணிகளுடன் அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது இந்தச் சோகம் நிகழ்ந்துள்ளது.
பேருந்து தாடிங் என்ற பகுதியைச் சுற்றியுள்ள மலைப்பாதையில் பயணித்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த ஆற்றில் தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 17 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்துத் தகவலறிந்த மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
ஆற்றில் மூழ்கிய பேருந்திலிருந்து படுகாயமடைந்த ஏராளமான பயணிகள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக நேபாளக் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.