சென்னையில் தொடங்கியது கிக் பாக்ஸிங் சூப்பர் லீக்!
தொழில்முறை கிக் பாக்ஸிங் போட்டியான “கிக் பாக்ஸிங் சூப்பர் லீக்” நேற்று சென்னை கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் குத்துச்சண்டை அகாடமியில் துவங்கியது.
தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த லீக் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதில் கோவை ஸ்மாஷர்ஸ், டிஆர்ஏ டேஷர்ஸ், சேலம் சூப்பர் ஸ்டார்ஸ், திருச்சி டிஎஸ்யூ வீரன்ஸ், அதிசய சென்னை டைட்டன்ஸ் என ஐந்து அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியிலும் 12 வீரர்கள், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டுள்ளனர் — மொத்தம் 60 பேர் பங்கேற்கின்றனர். போட்டிகள் 12 எடை பிரிவுகளில் நடைபெறும். ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெறும் வீரர் அல்லது அணி 2 புள்ளிகள் பெறும்.
மொத்த புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று அணிகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.