“சேவா தீர்த்தம் 140 கோடி இந்தியர்களின் கனவு சின்னம்” – பிரதமர் மோடி உரை
புதிய அலுவலக வளாகம் வளர்ந்த பாரதப் பயணத்தின் மைல்கல் என வலியுறுத்தல்
டெல்லியில் பிரதமரின் புதிய அலுவலக வளாகமான சேவா தீர்த்தம் மற்றும் கர்தவ்ய பவன் கட்டடங்களை திறந்து வைத்து நாட்டினரிடம் உரையாற்றிய பிரதமர் , இந்த புதிய கட்டடங்கள் இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, இந்த கட்டடங்கள் வெறும் கல், சிமெண்டு கொண்டு கட்டப்பட்டவை அல்ல; மாறாக 140 கோடி இந்தியர்களின் கனவுகளின் சின்னமாக உருவெடுத்தவை எனப் பாராட்டினார்.
மேலும், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மற்றும் கட்டடங்கள், காலனித்துவ மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டவை என குறிப்பிட்டார். அந்த அடிமைத்தன அடையாளத்திலிருந்து விடுபட்டு, புதிய வரலாற்றை தொடங்கும் கட்டமாக இந்த மாற்றம் அமைகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
“அதிகாரம் என்பது ஆட்சி செய்வதற்காக அல்ல; சேவை செய்வதற்காக” என்ற நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் ‘சேவா தீர்த்தம்’ மற்றும் ‘கர்தவ்ய பவன்’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.