வீடுகள் முழுவதும் ஓவியங்கள்; கிராமம் முழுவதும் கலை – ஒடிசாவின் ரகுராஜ்பூர் சிறப்பு தொகுப்பு
ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள என்ற சிறிய கிராமம், இந்தியாவின் பாரம்பரிய ஓவிய மற்றும் கைவினைக் கலை மரபை உலகிற்கு எடுத்துக்காட்டும் கலைத் தளமாக திகழ்கிறது.
புரி நகரத்திலிருந்து சுமார் 14 கிலோமீட்டரும், புவனேஸ்வரிலிருந்து 50 கிலோமீட்டரும் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் மொத்தம் 150க்கும் குறைவான வீடுகள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது இரண்டு கைவினைக் கலைஞர்கள் அல்லது ஓவியர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கிராமத்தின் அடையாளமாக விளங்குவது ‘பட்டசித்ரா’ ஓவியக்கலை. ‘பட்டா’ என்பது துணியை, ‘சித்ரா’ என்பது ஓவியத்தை குறிக்கும். இயற்கை வண்ணங்களை பயன்படுத்தி பாரம்பரிய துணிகளில் வரையப்படும் இந்த ஓவியங்களில், தொடர்பான காட்சிகள், இந்துப் புராணக் கதைகள், மற்றும் போன்ற இதிகாச நிகழ்வுகள் அழகாக சித்தரிக்கப்படுகின்றன.
ஓவியங்களுடன் சேர்ந்து, பாரம்பரிய முகமூடிகள், பனை ஓலை வேலைப்பாடுகள், காகிதக் கூழ் பொம்மைகள், மரச்சிற்பங்கள் போன்ற பல்வேறு கைவினைப் பொருட்களும் இங்கு தயாரிக்கப்படுகின்றன. மேலும், ஒடிசி நடனத்தின் புகழ்பெற்ற கலைஞரான பிறந்த ஊராகவும் ரகுராஜ்பூர் அறியப்படுகிறது.
2000ஆம் ஆண்டு, (Indian National Trust for Art and Cultural Heritage) ரகுராஜ்பூரை இந்தியாவின் முதல் பாரம்பரியக் கிராமமாக அறிவித்தது. அதன் பின்னர், இந்த கிராமம் சுற்றுலா பயணிகள் மற்றும் கலை ஆர்வலர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருகிறது.
வீடுகள் தோறும் ஓவியங்கள், வீதிகள் தோறும் கைவினைப் பொருட்கள் என முழுக் கிராமமே ஒரு திறந்தவெளி அருங்காட்சியகத்தைப் போன்ற தோற்றம் அளிப்பது ரகுராஜ்பூரின் தனிச்சிறப்பாகும்.