• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மார்ச் 25, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

அரபு நாடுகளுடன் வர்த்தக கூட்டணி – பாகிஸ்தானுக்கு இந்தியாவின் புதிய “செக்”

athibantv by athibantv
பிப்ரவரி 6, 2026
in Bharat, Big-News
A A
0
👁️ 859

அரபு நாடுகளுடன் வர்த்தக கூட்டணி – பாகிஸ்தானுக்கு இந்தியாவின் புதிய “செக்”

ஆறு நாடுகளை இணைக்கும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுடன் (GCC) நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை இந்தியா மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கமே இந்தியாவுக்கு சாதகமான வர்த்தக முன்னேற்றங்களோடு துவங்கியுள்ளது. முதலில், ஐரோப்பிய யூனியனுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதனைத் தொடர்ந்து, இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த வரியை 18 சதவீதமாக குறைத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்தியாவின் நிபந்தனைகளுக்கு இணங்கவே இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக அறிவித்தார்.

RelatedPosts

பழைய இரும்பு பாலம் இனி ‘பாலக் கஃபே’: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் அசத்தல் முயற்சி!

பழைய இரும்பு பாலம் இனி ‘பாலக் கஃபே’: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் அசத்தல் முயற்சி!

மார்ச் 25, 2026
உயிருக்கு உலை வைக்கும் பழச்சாறு: அழுகிய பழங்களைப் பயன்படுத்திய கடை உரிமையாளர் – பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!

உயிருக்கு உலை வைக்கும் பழச்சாறு: அழுகிய பழங்களைப் பயன்படுத்திய கடை உரிமையாளர் – பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!

மார்ச் 25, 2026
மக்களவையில் திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா நிறைவேற்றம்: அடையாளச் சான்றிதழ் வழங்கப் புதிய விதிமுறைகள்!

மக்களவையில் திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா நிறைவேற்றம்: அடையாளச் சான்றிதழ் வழங்கப் புதிய விதிமுறைகள்!

மார்ச் 25, 2026

உலகளாவிய வர்த்தக உறவுகளை வேகப்படுத்தி வரும் இந்தியா, தற்போது சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன் மற்றும் ஓமன் ஆகிய ஆறு நாடுகளை உள்ளடக்கிய அரபு நாடுகளின் கூட்டமைப்புடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கான விதிமுறை ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு ஜிசிசியுடன் முதன்முறையாக தொடங்கிய இந்த வர்த்தக பேச்சுவார்த்தைகள், 2011ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டன. பின்னர் 2022ல் மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்க இருதரப்பும் முடிவு செய்தது. 2023ல் திருத்தப்பட்ட விதிமுறை வரைவு வெளியிடப்பட்ட நிலையில், தற்போது ஒரு முக்கியமான முன்னேற்றம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜிசிசியுடன் கையெழுத்தாக உள்ள இந்த ஒப்பந்தம் உணவு பதப்படுத்தல், உள்கட்டமைப்பு, பெட்ரோ கெமிக்கல், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளுக்கு பெரும் பலன் அளிக்கும் என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டிலிருந்து இந்தியா மற்றும் ஜிசிசி நாடுகளுக்கிடையேயான இருதரப்பு வர்த்தகம் ஆண்டுதோறும் உயர்வை சந்தித்து வருகிறது.

2021–22 நிதியாண்டில் இந்தியா–ஜிசிசி வர்த்தக மதிப்பு சுமார் 155 பில்லியன் டாலராக இருந்தது. இதில் இறக்குமதி 110.7 பில்லியன் டாலராகவும், ஏற்றுமதி 43.9 பில்லியன் டாலராகவும் பதிவாகியது.

அடுத்த ஆண்டில், இந்த வர்த்தகம் 185 பில்லியன் டாலராக உயர்ந்தது. அதில் இறக்குமதி 133.2 பில்லியன் டாலராகவும், ஏற்றுமதி 51.3 பில்லியன் டாலராகவும் இருந்தது.

அதற்குப் பிறகு ஒரு ஆண்டு, வர்த்தக மதிப்பு 162 பில்லியன் டாலராக இருந்த நிலையில், கடந்த ஆண்டு அது மீண்டும் உயர்ந்து 179 பில்லியன் டாலரை எட்டியது. இதில் இறக்குமதி 121.7 பில்லியன் டாலராகவும், ஏற்றுமதி 56.9 பில்லியன் டாலராகவும் அதிகரித்துள்ளது.

தற்போது மீண்டும் தொடங்கியுள்ள பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில், இந்தியா–ஜிசிசி வர்த்தகம் பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, ஜிசிசி உறுப்புநாடுகளுடன் இந்தியா தனித்தனியாகவும் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. 2022ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்துடனும், கடந்த ஆண்டு டிசம்பரில் ஓமனுடனும் விரிவான பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தான பின்னணியில், ஜிசிசி நாடுகளுடன் இந்தியா மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியிருப்பது, பாகிஸ்தானை அரபு நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து தனிமைப்படுத்தும் ஒரு தந்திரமாகவும் பார்க்கப்படுகிறது.

Related

Tags: Bharat
Previous Post

புளியரை அருகே சதாசிவ மூர்த்தி கோயிலில் தை உத்திரத் திருவிழா பக்தி உற்சாகம்

Next Post

‘தி வேர்ல்ட் ஃபேக்டர் புக்’ தகவல் சேவைக்கு முடிவு – சிஐஏ அறிவிப்பு

RelatedPosts

பழைய இரும்பு பாலம் இனி ‘பாலக் கஃபே’: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் அசத்தல் முயற்சி!

பழைய இரும்பு பாலம் இனி ‘பாலக் கஃபே’: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் அசத்தல் முயற்சி!

மார்ச் 25, 2026
உயிருக்கு உலை வைக்கும் பழச்சாறு: அழுகிய பழங்களைப் பயன்படுத்திய கடை உரிமையாளர் – பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!

உயிருக்கு உலை வைக்கும் பழச்சாறு: அழுகிய பழங்களைப் பயன்படுத்திய கடை உரிமையாளர் – பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!

மார்ச் 25, 2026
மக்களவையில் திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா நிறைவேற்றம்: அடையாளச் சான்றிதழ் வழங்கப் புதிய விதிமுறைகள்!

மக்களவையில் திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா நிறைவேற்றம்: அடையாளச் சான்றிதழ் வழங்கப் புதிய விதிமுறைகள்!

மார்ச் 25, 2026
“மேற்காசியப் போரின் நீண்டகாலப் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்தியா தயார்”: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உறுதி!

“மேற்காசியப் போரின் நீண்டகாலப் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்தியா தயார்”: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உறுதி!

மார்ச் 25, 2026
சென்னையில் பயங்கரம்: 12 வயது சிறுமிக்கு 5 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது!

சென்னையில் பயங்கரம்: 12 வயது சிறுமிக்கு 5 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது!

மார்ச் 24, 2026
“அதிகாரிகளின் பிடிவாதப் போக்கு”: மம்தா அரசுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

“அதிகாரிகளின் பிடிவாதப் போக்கு”: மம்தா அரசுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

மார்ச் 24, 2026
Next Post
Home

‘தி வேர்ல்ட் ஃபேக்டர் புக்’ தகவல் சேவைக்கு முடிவு – சிஐஏ அறிவிப்பு

Home

தமிழக பெண்களுக்கும் வெளியூர்ப் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் – திமுக அரசை சாடிய நயினார் நாகேந்திரன்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

மத்திய கிழக்குப் போர்: கென்யாவில் முடங்கிய ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள் – பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் அபாயம்!

மத்திய கிழக்குப் போர்: கென்யாவில் முடங்கிய ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள் – பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் அபாயம்!

மார்ச் 25, 2026
பழைய இரும்பு பாலம் இனி ‘பாலக் கஃபே’: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் அசத்தல் முயற்சி!

பழைய இரும்பு பாலம் இனி ‘பாலக் கஃபே’: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் அசத்தல் முயற்சி!

மார்ச் 25, 2026
உயிருக்கு உலை வைக்கும் பழச்சாறு: அழுகிய பழங்களைப் பயன்படுத்திய கடை உரிமையாளர் – பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!

உயிருக்கு உலை வைக்கும் பழச்சாறு: அழுகிய பழங்களைப் பயன்படுத்திய கடை உரிமையாளர் – பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!

மார்ச் 25, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • மத்திய கிழக்குப் போர்: கென்யாவில் முடங்கிய ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள் – பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் அபாயம்!
  • பழைய இரும்பு பாலம் இனி ‘பாலக் கஃபே’: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் அசத்தல் முயற்சி!
  • உயிருக்கு உலை வைக்கும் பழச்சாறு: அழுகிய பழங்களைப் பயன்படுத்திய கடை உரிமையாளர் – பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.