• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மே 27, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

இந்தியா – அமெரிக்கா வர்த்தக உடன்பாடு: புதிய காலகட்டத்தைத் தொடங்கிய பிரதமர் மோடி

athibantv by athibantv
பிப்ரவரி 5, 2026
in Bharat, Big-News
0
📢 WhatsApp Channel Join
👁️ 3.5K 🔥 📋

இந்தியா – அமெரிக்கா வர்த்தக உடன்பாடு: புதிய காலகட்டத்தைத் தொடங்கிய பிரதமர் மோடி

இந்தியா–அமெரிக்கா இடையிலான வர்த்தக உடன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த கூடுதல் 25 சதவீத வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டதுடன், ஏற்கனவே நடைமுறையில் இருந்த 25 சதவீத இறக்குமதி வரியும் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம், வர்த்தக அணுகுமுறை, புவியியல் அரசியல் தந்திரம், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உலக சந்தை அமைப்பில் பிரதமர் மோடி ஒரு புதிய யுகத்தை உருவாக்கியுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தி தொகுப்பு பின்வருமாறு.

பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்திய பின்னர், இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரியை 18 சதவீதமாக குறைப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அதே சமயம், இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான வர்த்தக ஒப்பந்தத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் அதிரடி: ‘உமீத்’ இணையதள ஆவணங்களில் பெரும் குளறுபடி – 31,328 வக்ஃபு சொத்துகளின் பதிவை அதிரடியாக ரத்து செய்தது மாநில அரசு!

உத்தரப்பிரதேசத்தில் அதிரடி: ‘உமீத்’ இணையதள ஆவணங்களில் பெரும் குளறுபடி – 31,328 வக்ஃபு சொத்துகளின் பதிவை அதிரடியாக ரத்து செய்தது மாநில அரசு!

மே 25, 2026
பசுவைத் தேசிய விலங்காக அறிவிக்கக் கோரி உத்தரப்பிரதேசத்தில் மவுலானா அர்ஷத் மதானி அதிரடி முழக்கம் – முஸ்லிம் அமைப்புகள் ஒருமித்த ஆதரவு!

பசுவைத் தேசிய விலங்காக அறிவிக்கக் கோரி உத்தரப்பிரதேசத்தில் மவுலானா அர்ஷத் மதானி அதிரடி முழக்கம் – முஸ்லிம் அமைப்புகள் ஒருமித்த ஆதரவு!

மே 25, 2026

எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் அமெரிக்காவுடனான வர்த்தக மதிப்பை 500 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த இந்தியா சம்மதித்துள்ளதாகவும், அதே நேரத்தில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த உறுதியளித்துள்ளதாகவும் ட்ரம்ப் கூறினார். மேலும், அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவில் இருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2024 ஆம் ஆண்டில் 212.3 பில்லியன் டாலராக இருந்த இந்தியா–அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தகம், 2025 ஆம் ஆண்டில் 230 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த வர்த்தக மதிப்பை 500 பில்லியன் டாலராக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்காசியா மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்த பல நாடுகள் அதிக அளவிலான அமெரிக்க வரி விதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தியாவுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வரி, உலகளாவிய சந்தை பொருளாதாரத்திலும் விநியோக சங்கிலிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்கா, பிரிட்டனுக்கு 10 சதவீதமும், ஐரோப்பிய யூனியன், சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கு தலா 15 சதவீதமும் வரி விதித்துள்ளது. பிரேசிலுக்கு 50 சதவீதமும், தென்னாப்பிரிக்காவுக்கு 30 சதவீதமும், வியட்நாம், பிலிப்பைன்ஸ், வங்கதேசம் மற்றும் இலங்கைக்கு 20 சதவீதமும், பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் மலேசியாவுக்கு 19 சதவீதமும் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சீனாவுக்கு 40 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதுடன், fentanyl போதைப்பொருள் கடத்தல் தொடர்பான சட்டங்களின் கீழ் கூடுதல் வரி சுமைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதேபோல், லாவோஸ் மற்றும் மியான்மருக்கும் அமெரிக்கா 40 சதவீத இறக்குமதி வரியை அமல்படுத்தியுள்ளது.

உற்பத்தி மற்றும் அவுட்சோர்சிங் துறைகளில் சீனாவை அதிகமாக சார்ந்திருந்த அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகள், தற்போது “சைனா பிளஸ் ஒன்” என்ற தந்திரத்தின் அடிப்படையில், சீனாவுக்கு மாற்றாக இந்தியாவையே முன்னுரிமையாக தேர்வு செய்து வருகின்றன.

இந்த பின்னணியில், இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத வரி, உலகளாவிய முதலீடுகளை இந்தியாவை நோக்கி ஈர்க்கும் என்றும், இந்திய தொழில் முனைவோருக்கு குறிப்பிடத்தக்க லாப வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த வரி குறைப்பு காரணமாக, இந்தியாவின் ஜவுளி, கடல் உணவு, வாகன உற்பத்தி மற்றும் ரசாயனத் துறைகள் பெரும் பயன் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, லாப விகிதம் பொதுவாக 3 முதல் 5 சதவீதம் மட்டுமே இருக்கும் தொழிலாளர் அதிகம் தேவைப்படும் ஜவுளி, ஆயத்த ஆடை மற்றும் காலணி உற்பத்தித் துறைகளுக்கு இந்த ஒப்பந்தம் மிகுந்த ஆதரவாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன் விளைவாக, இந்தத் துறைகளில் இந்தியாவுடன் போட்டியிட்டு வரும் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் சீனாவுக்கு குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்படும் என்றும் பொருளாதார ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

கடந்த ஆண்டில் நியூசிலாந்து, ஓமன் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் வர்த்தக உடன்பாடுகளில் கையெழுத்திட்ட இந்தியா, இந்த ஆண்டில் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஐரோப்பிய யூனியனுடன் வரலாற்றுச் சிறப்பு மிக்க வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Bharat
Previous Post

இந்தியா – அமெரிக்கா வர்த்தக உடன்பாடு: இலக்கை எட்டிய பிரதமர் மோடி

Next Post

நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த குடும்பத்தைச் சேர்ந்தவரை ‘துரோகி’ என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது – ராகுலுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கண்டனம்

Next Post

நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த குடும்பத்தைச் சேர்ந்தவரை ‘துரோகி’ என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது – ராகுலுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கண்டனம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
இன்றைய நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விபரங்கள் இதோ:

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

மே 27, 2026
“தமிழகத்தில் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்” – மதுரை சிறுவன் படுகொலை விவகாரத்தில் அண்ணாமலை கடும் கண்டனம்; “கொண்டாட்ட மனநிலையில் தவெக அரசு” என அதிரடி விமரிசனம்!

முட்டைகளின் சேமிப்பு காலம், தர பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோக நிலை குறித்து தமிழக அரசு வெளிப்படை வேண்டும்… அண்ணாமலை

மே 27, 2026
இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

மே 26, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:
  • முட்டைகளின் சேமிப்பு காலம், தர பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோக நிலை குறித்து தமிழக அரசு வெளிப்படை வேண்டும்… அண்ணாமலை
  • இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

இன்றைய நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விபரங்கள் இதோ:

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

மே 27, 2026
“தமிழகத்தில் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்” – மதுரை சிறுவன் படுகொலை விவகாரத்தில் அண்ணாமலை கடும் கண்டனம்; “கொண்டாட்ட மனநிலையில் தவெக அரசு” என அதிரடி விமரிசனம்!

முட்டைகளின் சேமிப்பு காலம், தர பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோக நிலை குறித்து தமிழக அரசு வெளிப்படை வேண்டும்… அண்ணாமலை

மே 27, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN