நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.9% வளர்ச்சி பெறும்
டெலாய்ட் இந்தியா வெளியிட்ட அறிக்கையின் படி, 2025-26 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சி பதிவு செய்தது.
இதன்படி, முழு நிதியாண்டுக்கான வளர்ச்சி 6.7% – 6.9% வரை இருக்க வாய்ப்பு உள்ளது. இது டெலாய்ட்டின் முந்தைய கணிப்பை விட 0.3% அதிகம்.
அறிக்கை கூறுவதாவது, அதிகரிக்கும் தேவை மற்றும் கொள்கை சீர்திருத்தங்கள் காரணமாக நடப்பாண்டில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும், அடுத்த ஆண்டிலும் இதேபோன்ற வளர்ச்சி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.