2026–27 பட்ஜெட் விளைவாக விலை குறையக்கூடிய பொருட்கள்
2026–27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டின் தாக்கத்தால், புற்றுநோய் சிகிச்சை மருந்துகள், மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் மற்றும் ஸ்மார்ட் போன்களின் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரி தளர்வுகள் மற்றும் சலுகைகளின் காரணமாக, புற்றுநோய் மற்றும் அரிய நோய்களுக்கு பயன்படும் உயிர்காக்கும் மருந்துகள், சூரிய ஆற்றல் பலகைகள் (சோலார் பேனல்கள்), ஸ்மார்ட் கைபேசிகள் ஆகியவற்றின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தோல் தயாரிப்புகள், மைக்ரோவேவ் அடுப்புகள், லித்தியம் பேட்டரிக்கான உதிரிப்பாகங்கள் ஆகியவையும் விலை குறையும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
அதேபோல், சிவிலியன் விமானப் பயிற்சிக்குப் பயன்படும் விமான உதிரிப்பாகங்கள், 7 வகையான உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் நீரிழிவு நோய்க்கான மருந்துகளின் விலையும் குறைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.