இந்து கோயில்களை சேதப்படுத்திய கஜினி முகமதுவை காங்கிரஸ் மகிமைப்படுத்துகிறது – பாஜக குற்றச்சாட்டு

Date:

இந்து கோயில்களை சேதப்படுத்திய கஜினி முகமதுவை காங்கிரஸ் மகிமைப்படுத்துகிறது – பாஜக குற்றச்சாட்டு

இந்து கோயில்களை அழித்ததாக வரலாற்றில் கூறப்படும் கஜினி முகமது மற்றும் லோடி அரச வம்சத்தை காங்கிரஸ் தொடர்ந்து போற்றிப் பேசுவதாக பாஜக கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், குடியரசுத் துணைத் தலைவராக பதவி வகித்த ஹமீத் அன்சாரி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, கஜினி முகமது மற்றும் லோடி வம்சத்தை அந்நியர்கள் என்று குறிப்பிடுவது தவறான அணுகுமுறை என அவர் கருத்து தெரிவித்தார்.

இந்த கருத்துக்கு எதிர்வினையாற்றிய பாஜக செய்தித் தொடர்பாளர் செஷாத் பூனாவாலா, நாட்டின் உண்மையான வரலாற்றை காங்கிரஸ் திட்டமிட்டு மாற்றிக் கூறுவதாகவும், இந்துக்களின் பண்பாட்டு அடையாளங்கள் மற்றும் தொன்மையான சின்னங்கள் மீது நிகழ்ந்த தாக்குதல்களை காங்கிரஸ் சிறுமைப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.

குஜராத்தில் அமைந்துள்ள சோமநாதர் கோயிலை இடித்து அவமதித்த கஜினி முகமதுவை காங்கிரஸ் புகழ்வதாக விமர்சித்த அவர், இந்து சமூகத்திற்கு எதிராக பல கொடுமைகளை செய்த அவுரங்கசீப் உள்ளிட்டோரின் செயல்களை காங்கிரஸ் மறைக்க முயல்கிறது என்றும் சாடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழகத் தேர்தல் களம்: அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு இறுதி? நாளை சென்னை வருகிறார் பியூஷ் கோயல்!

தமிழகத் தேர்தல் களம்: அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதி?...

அசாம் தேர்தல்: காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த மூத்த எம்.பி. – அதிரடி திருப்பம்!

அசாம் தேர்தல்: காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த மூத்த எம்.பி....

மந்தமாகும் பூமியின் சுழற்சி: நீளும் பகல் நேரமும் மனித உடலில் அதன் தாக்கமும்!

மந்தமாகும் பூமியின் சுழற்சி: நீளும் பகல் நேரமும் மனித உடலில் அதன்...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: தொகுதிப் பங்கீட்டிற்காக டெல்லி விரைகிறார் எடப்பாடி பழனிசாமி!

தமிழக சட்டமன்றத் தேர்தல்: தொகுதிப் பங்கீட்டிற்காக டெல்லி விரைகிறார் எடப்பாடி பழனிசாமி! சென்னை:...