திருச்செந்தூர் முருகன் கோயிலில் களைகட்டும் தைப்பூச விழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச தினத்தை முன்னிட்டு பக்தர்கள் காவடி சுமந்து, அலகு குத்தி கோயில் நோக்கி பாத யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி, விருதுநகர், ராஜபாளையம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள் விரதமிருந்து வந்து, கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். பக்தர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, தனி வரிசையில் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாத யாத்திரை மற்றும் கோயில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக 750க்கும் மேற்பட்ட போலீசார் திருச்செந்தூரில் பணியாற்றி வருகின்றனர்.