ஈரான் புரட்சிப் படை பயங்கரவாத அமைப்பு – ஐரோப்பிய யூனியன் கடும் நடவடிக்கை
ஈரானின் புரட்சிகர காவல் படையை (Revolutionary Guard) பயங்கரவாத அமைப்பாக அறிவித்து ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான முடிவை எடுத்துள்ளது.
ஈரானில் தொடர்ந்து உயர்ந்து வரும் கடும் விலைவாசி உயர்வை கண்டித்து, மதகுரு கமேனி தலைமையிலான அரசுக்கு எதிராக பொதுமக்கள் பெரும் அளவில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், தன் சொந்த நாட்டின் குடிமக்களையே கொடூரமாக ஒடுக்கி கொலை செய்வதாக குற்றம்சாட்டி, ஈரான் புரட்சிப் படையை பயங்கரவாத இயக்கமாக வகைப்படுத்தி ஐரோப்பிய யூனியன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.