அமெரிக்காவை பதம் பார்த்த பனிப்புயல் – பொருளாதாரத்துக்கும் பெரிய அதிர்ச்சி
அமெரிக்காவில் கடந்த 1994ம் ஆண்டு பிறகு மிக மோசமான பனிப்புயல் வீசியுள்ளது. ஆர்கன்சஸ், ஓஹியோ, டெக்சாஸ், மாசசூசெட்ஸ், மிசிசிப்பி, டென்னசி மற்றும் நியூ இங்கிலாந்து பகுதிகளில் 2 அடி உயரத்திற்கு மேல் பனி படைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பனிப்புயலால் சாலை, ரயில், விமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு, 25 பேர் உயிரிழந்துள்ளனர். -31°C வெப்பநிலையால் பொதுமக்கள் கடும் குளிரை எதிர்கொள்ள முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு, பல லட்சம் வீடுகள் பனிப்பொழிவு மற்றும் பனிமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. 20 மாகாணங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு மீட்பு மற்றும் பனியாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இது மட்டும் அல்லாமல் பொருளாதாரத்துக்கும் பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. ACCUWEATHER கணக்கீட்டின்படி, பனிப்புயலால் 11,400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, சுமார் 105–115 பில்லியன் டாலர் மதிப்பில் இழப்பு ஏற்பட்டிருக்கலாம். வர்த்தகம், மின், போக்குவரத்து மற்றும் விநியோக சங்கிலிகள் பாதிக்கப்பட்டு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5%–2% குறைவு ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
வானிலை ஆய்வு மையம், பனிப்புயலின் தாக்கம் இன்னும் சில நாட்கள் தொடரும் என எச்சரித்து உள்ளது.