ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் பல துறைகளில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் : பியூஷ் கோயல்
ஐரோப்பிய யூனியனுடன் கையெழுத்தான ஒப்பந்தம், இந்தியாவின் ஜவுளி, ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு தொழில் துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய திருப்பமாக அமையும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஆண்டுதோறும் சுமார் 6.5 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றன என்று குறிப்பிட்டார்.
அந்த பெரும் சந்தையில் இந்தியாவின் தற்போதைய பங்கு வெறும் 1.5 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரை மட்டுமே உள்ளதாகவும், புதிய ஒப்பந்தத்தின் மூலம் இந்தப் பங்கு பல மடங்கு உயர வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.