பொறுப்புள்ள நாடுகளின் குறியீட்டு பட்டியல் – அமெரிக்கா, சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா!
உலக அறிவுசார் அறக்கட்டளை வெளியிட்டுள்ள “Responsible Nations Index (RNI)” எனும் பொறுப்புள்ள நாடுகளின் குறியீட்டு பட்டியலில், அமெரிக்கா மற்றும் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா 16-வது இடத்தைப் பிடித்து உலக அரங்கில் பெருமை சேர்த்துள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் அறிவுசார் ஒத்துழைப்புடன், மும்பை இந்திய மேலாண்மை நிறுவனத்தின் வழிகாட்டுதலில், மூன்று ஆண்டுகால ஆழமான ஆய்வின் பின்னர் இந்தக் குறியீடு முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.
உலக அரங்கில் நாடுகள் எவ்வாறு மதிப்பிடப்படுகின்றன என்பதை விளக்குவதே இந்தக் குறியீட்டின் முக்கிய நோக்கமாகும்.
இந்த ஆய்வின் அடிப்படை, பொறுப்பற்ற அதிகாரம் நீடித்த செழிப்புக்கு வழிவகுக்காது என்பதே.
நியாயம், நேர்மை, நிலைத்தன்மை ஆகியவற்றுடன் அதிகாரம் பயன்படுத்தப்படுவதன் அடிப்படையில் ஒரு நாட்டின் முன்னேற்றம் மதிப்பிடப்பட வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
21-ம் நூற்றாண்டில் ஒரு நாட்டை பொறுப்புள்ள நாடாக உருவாக்குவது எது என்பதை புரிந்துகொள்ள இந்தக் குறியீடு முக்கியமான படி என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலக அறிவுசார் அறக்கட்டளையின் நிறுவனர் சுதான்ஷு மிட்டல்,
மனித கண்ணியப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உலக அமைதிக்கான பங்களிப்பு ஆகியவற்றில் நாடுகள் தங்களது அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதையே இந்தக் குறியீடு பிரதிபலிக்கிறது என தெரிவித்துள்ளார்.
இந்தக் குறியீடு மூன்று முக்கிய தூண்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது:
- உள்பொறுப்பு – குடிமக்களின் கண்ணியம், நல்வாழ்வு, அதிகாரமளித்தல்
- சுற்றுச்சூழல் பொறுப்பு – சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி
- வெளிப்புற பொறுப்பு – சர்வதேச அரங்கில் நாட்டின் நடத்தை
உலக வங்கி, IMF, WHO உள்ளிட்ட ஐநா அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச தரவுகளைப் பயன்படுத்தி, 154 நாடுகளை உள்ளடக்கி இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில்
சிங்கப்பூர் முதலிடமும், சுவிட்சர்லாந்து இரண்டாமிடமும், டென்மார்க் மூன்றாமிடமும் பெற்றுள்ளன.
இந்தியா 16-வது இடத்தில் இருந்து, அமெரிக்கா (66-வது இடம்) மற்றும் சீனா (68-வது இடம்) ஆகியவற்றை முந்தியுள்ளது.
ரஷ்யா 96-வது இடத்திலும், வடகொரியா 146-வது இடத்திலும், மத்திய ஆப்பிரிக்கா 154-வது இடத்திலும் உள்ளது.
பொருளாதாரமும், இராணுவ வலிமையும் மட்டுமல்ல…
பொறுப்பும் இந்தியாவின் பலம் என்பதை உலகிற்கு நிரூபித்த சாதனை!
இந்தியாவிற்கு பெருமை, நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள்