வங்கதேசத்தில் நிகழ்ந்த கொடூர கொலை – ஆழ்ந்த இரங்கலும் வேதனையும்
வங்கதேசத்தில் 23 வயதான இந்து இளைஞர் சஞ்சல் சந்திர பௌமிக் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் உலகளாவிய அதிர்ச்சியையும், ஆழ்ந்த மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
குமில்லா மாவட்டம், லக்ஷ்மிபூர் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சல் சந்திர பௌமிக், நர்சிங்டி பகுதியில் உள்ள வாகன பழுது நீக்குமிடத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வந்த நிலையில், பணியிடம் அருகே தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்களால் பெட்ரோல் ஊற்றி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.
மனிதத்தன்மையை உலுக்கும் இந்த கொடூர சம்பவம், வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சிக்கல்களை மீண்டும் நினைவூட்டுகிறது.
இந்த இளம் உயிரின் இழப்பு, அவரது குடும்பத்தினருக்கும் சமூகத்திற்கும் ஈடு செய்ய முடியாத வேதனையாகும்.
உயிரிழந்த சஞ்சல் சந்திர பௌமிக்கின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்.
இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் விரைவில் கண்டறியப்பட்டு கடுமையான தண்டனை பெற வேண்டும்.
இவ்வுலகில் மனித நேயம், சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிலைபெற வேண்டுகிறோம்