அமெரிக்க ராணுவ சக்தியை மேலும் உயர்த்தும் டிரம்ப் – எப்-47 போர் விமானம் விரைவில் சேர்ப்பு
இதுவரை ரேடார் கண்காணிப்பில் சிக்காத அதிநவீன எப்-47 ரக போர் விமானம் அமெரிக்க ராணுவத்தின் ஆயுதப் பட்டியலில் இணைக்கப்பட உள்ளதாக, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா தனது பாதுகாப்புத் திறனை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புதிய தொழில்நுட்பங்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, எப்-47 வகை போர் விமானத்தை வாங்குவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உயர் ஆபத்துத் திறன் கொண்ட போர் விமானத்தை தயாரிக்கும் ஒப்பந்தத்தை போயிங் நிறுவனம் பெற்றுள்ள நிலையில், அந்த விமானங்கள் விரைவில் அமெரிக்க ராணுவத்திற்கு வழங்கப்படும் என்றும் டிரம்ப் உறுதிப்படுத்தினார்.