நாய் காரணமாக கார் சிக்கல் – திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, நாய் சாலையில் குறுக்கே வந்ததால் ஒரு கார் சாலை தடுப்பில் ஏறி சிக்கிக்கொண்டது.
தெள்ளார் கிராமத்தை சேர்ந்த ஓர் நபர் தனது காரில் செல்லும் போது, திடீரென நாய் முன்னிலையில் வந்ததால் அதனை மோதாமல் வைக்க முயற்சித்து வாகனத்தை லேசாக திருப்பினார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதி இடையில் சிக்கி கொண்டது.
இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.