ஜப்பான் நாடாளுமன்றம் கலைப்பு – பொதுத் தேர்தலுக்கு அறிவிப்பு
ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி, அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
லிபரல் ஜனநாயகக் கட்சி, ஜப்பான் இன்னோவேஷன் கட்சியுடன் கூட்டணி அமைத்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சனே தகாய்ச்சி ஜப்பானின் முதல் பெண் பிரதமராக பொறுப்பேற்றார்.
இந்தச் சூழலில், ஜப்பான் நாடாளுமன்றத்தின் வழக்கமான கூட்டத்தொடர் இன்று நடைபெற்ற போது, மொத்தம் 465 உறுப்பினர்களைக் கொண்ட கீழவையை கலைப்பதாக அவர் அறிவித்தார்.
தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் 2028 வரை நீடிக்கவிருந்த நிலையில், அதற்கு முன்பாகவே நாடு முழுவதும் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் தகாய்ச்சி தெரிவித்துள்ளார்.