உலக அளவில் இரண்டாவது அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரமாக பெங்களூரு
கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு, உலகிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும் நகரங்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
நெதர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட ஒரு தொழில்நுட்ப நிறுவனம், 2025ஆம் ஆண்டிற்கான உலக நகரங்களின் போக்குவரத்து நெரிசல் பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதிலுள்ள நகரங்களில், பயணிகளின் சராசரி பயண நேரம் மற்றும் சாலை நெரிசல் அளவுகள் தொடர்பாக 2025ல் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த தரவரிசை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில், எதிர்பாராத வகையில் பெங்களூரு நகரம் இரண்டாவது இடத்தில் இடம்பிடித்துள்ளது. அந்த நகரில் போக்குவரத்து நெரிசல் 74.4 சதவீதம் அளவில் இருப்பதாகவும், 10 கிலோமீட்டர் தூரத்தை கடக்க சராசரியாக 36 நிமிடங்கள் ஆகும் என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தரவரிசையில், மும்பை 23ஆம் இடத்தையும், சென்னை 32ஆம் இடத்தையும் பெற்றுள்ளன.