காசா அமைதி முயற்சியில் பங்கேற்க இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ள காசா அமைதி குழுவில் இணைவதற்கு இஸ்ரேலும், ஐக்கிய அரபு அமீரகமும் சம்மதம் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் – பாலஸ்தீன இடையிலான நீண்டகால மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, அமெரிக்கா தலைமையில் அமைதி குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்களுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்து வருகிறார்.
இந்தச் சூழலில், காசா அமைதி குழுவில் சேர இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரப்பூர்வ ஒப்புதலை வழங்கியுள்ளார்.
அதேபோல், இந்த அமைதி முயற்சியில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகமும் அதிகாரபூர்வமாக சம்மதம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், காசா அமைதி குழுவில் இணையும் முதல் அரபு நாடாக அமீரகம் மாறியுள்ளது.
இதற்கிடையில், இந்த அமைதி வாரியத்தில் பிரான்ஸ் பங்கேற்காவிட்டால், அந்த நாட்டுக்கு 200 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.