மார்ச் 29 முதல் சென்னை – துபாய் ஏர் இந்தியா விமான சேவை நிறுத்தம்
சென்னை மற்றும் துபாய் இடையே இயக்கப்பட்டு வந்த ஏர் இந்தியா விமான சேவையை, வரும் மார்ச் 29-ஆம் தேதி முதல் நிறுத்த உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும் துபாய்க்கு, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா தொடர்ச்சியாக விமானங்களை இயக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், துபாய் நகரத்திற்கான சேவையை திடீரென நிறுத்தும் முடிவு பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், தமிழகத்தில் இருந்து ஏர் இந்தியா தனது விமான சேவைகளை விரிவுபடுத்த எந்த முயற்சியும் எடுக்காமல், மாநிலத்திலிருந்து முழுமையாக விலகும் நோக்கில் செயல்படுவதாக விமான நிலைய வட்டாரங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.