நண்பர்களே உண்மையான மகிழ்ச்சி – ரஜினிகாந்த் உருக்கம்
நண்பர்களை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நேரில் சந்தித்து உரையாடுவது தனக்கு மிகுந்த சந்தோசத்தை அளிக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் மனமுருக தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 1975 முதல் 1979 ஆம் ஆண்டு வரை கல்வி பயின்ற பழைய மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய காணொளி அங்கு ஒளிபரப்பப்பட்டது. அதில், “சிவாஜி” என்ற தனது பழைய பெயரை தான் மறந்துவிட்டாலும், நண்பர்கள் அந்த பெயரை சொல்லி அழைப்பது தனக்கு பேரானந்தம் அளிப்பதாக அவர் கூறினார்.
ரஜினிகாந்தின் இந்த உருக்கமான பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.