செப்டம்பரில் சேவையில் இணையும் சி-295 ராணுவ சரக்கு விமானம்
இந்தியாவில் உருவாக்கப்படும் முதலாவது C-295 ராணுவ போக்குவரத்து விமானம், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் வதோதரா நகரில் அமைந்துள்ள ஏர்பஸ்–டாடா இணை தொழிற்சாலையில், ஸ்பெயின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் இந்த விமானம் முழுமையாக உள்நாட்டு உற்பத்தியாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் முக்கிய அங்கமாக, தனியார் நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்படும் இந்தியாவின் முதல் ராணுவ விமானம் என்ற பெருமையை சி-295 விமானம் பெற்றுள்ளது.