பாஜக தேசிய தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் நிதின் நபின்
பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவராக நிதின் நபின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
பாஜக தேசிய தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை சமீபத்தில் கட்சி தலைமையகம் வெளியிட்டிருந்தது. அதன் அடிப்படையில், ஜனவரி 19ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது பாஜக தேசிய செயல் தலைவர் பொறுப்பில் இருக்கும் நிதின் நபின், தேசிய தலைவர் பதவிக்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருக்கு ஆதரவாக கட்சியைச் சேர்ந்த 37 பேர் தனித்தனியாக வேட்புமனுக்களை சமர்ப்பித்தனர்.
வேறு எவரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், நிதின் நபின் பாஜக தேசிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் அதிகாரப்பூர்வமாக பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல முக்கிய தேசிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.