வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றியுரை
மகாராஷ்டிரா உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பாஜக பெரும் வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, வாக்களித்த பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தேசிய ஜனநாயக கூட்டணியுடன் மக்களுக்குள்ள உறுதியான நம்பிக்கையையும் இணைப்பையும் தேர்தல் முடிவுகள் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் என்.டி.ஏ கூட்டணி செயல்பட்டதாலேயே இந்த வெற்றி சாத்தியமானதாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்கள்நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட பாஜக தொண்டர்களை நினைத்து பெருமிதம் அடைகிறேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்க்கட்சிகள் பரப்பிய தவறான தகவல்களை பாஜக திறமையாக எதிர்கொண்டு முறியடித்துள்ளதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.