லண்டனில் பள்ளி மாணவி கடத்தல், பாலியல் வன்கொடுமை – சீக்கியர்களின் போராட்டத்தால் மீட்பு
இங்கிலாந்து தலைநகர் லண்டனில், பாகிஸ்தானைச் சேர்ந்த சிலரால் கடத்தப்பட்ட பள்ளி மாணவி ஒருவரை, அங்குள்ள சீக்கிய சமூகத்தினர் தலையிட்டு போராடி பாதுகாப்பாக மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு லண்டனின் ஹவுன்ஸ்லோ பகுதியில் வசித்து வந்த அந்த சிறுமி, பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அந்த நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகவும், பின்னர் அவரது நண்பர்களான மேலும் சில பாகிஸ்தானியர்களாலும் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவத்திற்குப் பிறகு, சிறுமியை ஒரு குடியிருப்பில் அடைத்து வைத்து தொடர்ந்து சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் அப்பகுதியில் வசிக்கும் சீக்கிய சமூகத்தினருக்கு கிடைத்ததை அடுத்து, 200க்கும் மேற்பட்டோர் அந்த குடியிருப்பை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், போலீசார் பாதுகாப்புடன் அந்த இடத்திற்குள் சென்று சிறுமியை மீட்டனர். சம்பவம் தொடர்பாக, சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் நபர்களை லண்டன் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.