வருங்கால யுத்தங்களை எதிர்கொள்ள இந்திய ராணுவம் முழுமையாக தயார் – உபேந்திர திவேதி
எதிர்காலத்தில் உருவாகக்கூடிய போர் சூழ்நிலைகளை சமாளிக்க இந்திய ராணுவம் முழு தயாரிப்புடன் இருப்பதாக ராணுவத் தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
ராணுவ தினத்தை முன்னிட்டு ஜெய்ப்பூரில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், ராணுவ வீரர்கள், முன்னாள் படைவீரர்கள், அதிகாரிகள் மற்றும் நாட்டுமக்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், கடமையின்போது உயிர்தியாகம் செய்த வீரர்களை ஆழ்ந்த மரியாதையுடன் நினைவுகூருவதாகவும் கூறினார்.
இந்திய ராணுவம் அனைத்து வகை யுத்தங்களையும், எந்தவிதமான தாக்குதல்களையும் எதிர்த்து நிற்கும் திறன் பெற்றதாகவும், எந்தச் சூழ்நிலைக்கும் தயாராக இருப்பதாகவும் உபேந்திர திவேதி வலியுறுத்தினார்.