அமலாக்கத்துறை சோதனை தடுப்பு விவகாரம் – மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
அமலாக்கத்துறை நடத்திய சோதனையை தடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு, நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட நிகழ்வை மிகவும் தீவிரமான விவகாரமாகக் கருதிய நீதிபதிகள், இந்த வழக்கை நீதித்துறை ஆய்வுக்குட்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாகக் கருத்து தெரிவித்தனர்.
மேலும், ஜனவரி 8ஆம் தேதி நடந்த சம்பவங்களுக்கான சிசிடிவி காட்சிகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும், அமலாக்கத்துறை அளித்த புகாருக்கு மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மேற்கு வங்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.