ரஷ்யாவில் 146 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொடர்ச்சியான பனிப்பொழிவு
ரஷ்யாவில் கடந்த 146 ஆண்டுகளில் காணாத அளவுக்கு, இடைவிடாது கடுமையான பனிப்பொழிவு பதிவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைநகரான மாஸ்கோ, தற்போது கடும் குளிர் காலநிலையையும், வரலாற்றில் அரிதாக நிகழும் அளவிலான கனமான பனிவீழ்ச்சியையும் ஒரே நேரத்தில் எதிர்கொண்டு வருகிறது.
இதன் காரணமாக சாலைகள் முழுவதும் தடித்த பனியால் மூடப்பட்டு, நடைபாதைகள்கூட அடையாளம் தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இதனால் தனியார் வாகனங்கள் மட்டுமன்றி, பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டு, மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.