மகரசங்கராந்தியன்று கன்றுகளுக்கு புல் கொடுத்து மகிழ்ந்த பிரதமர் மோடி
மகரசங்கராந்தி திருநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் பராமரித்து வரும் கன்றுகளுக்கு புல் கொடுத்து அன்பை வெளிப்படுத்தினார்.
சமீப காலத்தில், தனது இல்லத்தில் வளர்க்கப்படும் ஒரு பசு புதிதாக கன்றை ஈன்றதாகவும், அந்தக் கன்றுக்கு ‘தீப்ஜோதி’ என்று பெயரிட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றது.
இந்நிலையில், மகரசங்கராந்தி தினத்தில் கன்றுகளுக்கு புல் வழங்கும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, அந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.