மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் கோலாகலமாக நடந்த பொங்கல் விழா
டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் எல். முருகனின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் நடைபெற்ற இந்தப் பொங்கல் விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. விழாவின் சிறப்பு நிகழ்வாக பிரதமர் மோடி பங்கேற்று, புதுப்பானையில் பொங்கல் சமைத்து, ஆரத்தி எடுத்து வழிபாடுகளை மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மேலும், விழாவில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வழங்கும் இசை நிகழ்ச்சிக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.