பொங்கல் பண்டிகையையொட்டி ஜெகன்நாதர் கோயிலில் அமித்ஷா வழிபாடு
பொங்கல் திருநாளும் மகர சங்கராந்தி விழாவும் முன்னிட்டு, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டார்.
கோயிலில் அவர் இறைவனை வழிபட்டதுடன், அங்கு இருந்த யானைக்கு உணவு வழங்கி, பசுக்களுக்கு தீவனமும் அளித்தார்.
மேலும், கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களை சந்தித்து, அவர்களுக்கு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளையும் தெரிவித்தார்.