“மின்னணு ஏற்றுமதி ரூ.4 லட்சம் கோடியை தாண்டியது” – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்னணு சாதனங்களின் ஏற்றுமதி மதிப்பு ரூ.4 லட்சம் கோடியை கடந்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடப்பு ஆண்டில் பல செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகள் செயல்படத் தொடங்க உள்ளதால், மின்னணு பொருட்களின் ஏற்றுமதி அளவு மேலும் உயர்வடையும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
மேலும், தற்போதைய நிதியாண்டில் இந்தியாவின் ஸ்மார்ட்போன் உற்பத்தி மதிப்பு ரூ.6 கோடியே 76 லட்சமாக இருக்கும் என்றும், அதில் ரூ.2 கோடியே 70 லட்சம் மதிப்புள்ள சாதனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.