முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Date:

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி

வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

வங்கதேசம் வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், அந்நாட்டின் அரசியல் களத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டு வந்த அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள், தற்போது கிடைத்த அரசியல் வெற்றிடத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, தேர்தலில் கால்பதிக்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி, வங்கதேச அரசியலில் மீண்டும் முக்கிய சக்தியாக உருவெடுத்து வருகிறது.

ஹசீனாவின் வீழ்ச்சி – அரசியல் வெற்றிடம்

2024ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், வங்கதேசம் முழுவதும் வெடித்த மாணவர் போராட்டங்கள், அதன் தொடர்ச்சியாக உருவான வன்முறை கலவரங்கள், பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை வீழ்த்தின. 15 ஆண்டுகளாக ஆட்சி செய்த அவாமி லீக் கட்சி அதிகாரத்தை இழக்க, பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

இதனைத் தொடர்ந்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. பதவியேற்ற உடனே, இந்தியாவுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடித்த முகமது யூனுஸ், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதித்தார். அதே சமயம், பல ஆண்டுகளாகத் தடை செய்யப்பட்டு வந்த ஜமாத்-இ-இஸ்லாமி மீதான தடையை நீக்கி, அரசியல் களத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார்.

தேர்தல் அறிவிப்பு – இஸ்லாமிய குழுக்களுக்கு கிடைத்த வாய்ப்பு

இடைக்கால அரசு பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, பிப்ரவரி 12ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், நீண்ட காலமாக அரசியல் விளிம்பில் இருந்த இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களுக்கு அபூர்வமான வாய்ப்பு கிடைத்துள்ளது.

மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்ற குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டனை பெற்றிருந்த ஷேக் ஹசீனா, தனது ஆட்சிக் காலத்தில் இஸ்லாமிய இயக்கங்களை கடுமையாக ஒடுக்கினார். 1971ஆம் ஆண்டு விடுதலைப் போரின் போது பாகிஸ்தானை ஆதரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர்கள் பலர் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர்; சிலர் தூக்கிலிடப்பட்டனர்.

மீண்டும் எழும் ஜமாத்-இ-இஸ்லாமி

ஷேக் ஹசீனா அரசியலில் இல்லாத சூழலில், ஜமாத்-இ-இஸ்லாமி தற்போது வங்கதேச அரசியலில் மீண்டும் தலையெடுத்து வருகிறது. ஆயிரக்கணக்கான மதரஸாக்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பான ஹெஃபாசாத்-இ-இஸ்லாம், அடிமட்டத்தில் பெரும் செல்வாக்கு கொண்ட சக்தியாக செயல்படுகிறது.

கடந்த ஆண்டு ஹெஃபாசாத் தலைவர்கள் ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்ததும், டிசம்பர் மாதத்தில் தாலிபான் பிரதிநிதிகள் வங்கதேசத்திற்கு வந்ததும், இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களின் சர்வதேச தொடர்புகள் குறித்து கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்குடன், வஹாபி மற்றும் சலாபி இஸ்லாம் போக்குகளை பின்பற்றும் குழுக்கள், பாரம்பரிய வங்காள கலாச்சார சடங்குகளை நிராகரித்து, கடுமையான மத அடிப்படைவாதத்தை பரப்பி வருகின்றன.

கூட்டணிகள் – தேர்தல் கணக்குகள்

அவாமி லீக் அரசியல் களத்தில் இருந்து ஓரங்கப்பட்டுள்ள நிலையில், ஜமாத்-இ-இஸ்லாமி உள்ளிட்ட இஸ்லாமிய குழுக்கள், தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்த முயற்சிக்கின்றன. 2024 புரட்சியில் முக்கிய பங்கு வகித்த மாணவர் தலைவர்களால் உருவாக்கப்பட்ட தேசிய குடிமக்கள் கட்சியுடன் ஜமாத் கூட்டணி அமைத்துள்ளது.

மேலும், இந்த தேர்தலில் பெண் வேட்பாளர்களை தவிர்த்து, ஆண் வேட்பாளர்களை மட்டுமே முன்னிறுத்தியுள்ளது. 17 கோடி மக்கள் தொகை கொண்ட வங்கதேசத்தில் சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மை என்றாலும், அஹ்மதியா மற்றும் ஷியா சமூகங்கள் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. மக்கள்தொகையில் சுமார் 10 சதவீதம் இந்துக்கள் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான கிறிஸ்தவர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், ஜமாத்-இ-இஸ்லாமி ஒரு இந்து வேட்பாளரை அறிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது உண்மையான மாற்றமா அல்லது தேர்தல் நேர கணக்கா என்ற கேள்வி எழுந்துள்ளது. “சீர்திருத்தம் உள்ளிருந்து வரவில்லை; இது மக்களை ஏமாற்றும் உத்தி” என அரசியல் ஆய்வாளர்கள் விமர்சிக்கின்றனர்.

இந்தியாவுக்கான தாக்கம் – எழும் கேள்விகள்

வரவிருக்கும் தேர்தலில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும், ஜமாத்-இ-இஸ்லாமி தலைமையிலான இஸ்லாமிய சக்திகள் அதிகாரத்திற்கு வந்தால், அதன் தாக்கம் இந்தியா–வங்கதேச உறவுகளில் எவ்வாறு இருக்கும் என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. குறிப்பாக பாதுகாப்பு, எல்லை நிலைமை, மதச் சிறுபான்மையினரின் பாதுகாப்பு ஆகியவை இந்தியாவுக்கு பெரும் கவலையாக மாறியுள்ளன.

வங்கதேசத்தில் நடைபெறவுள்ள இந்த தேர்தல், அந்த நாட்டின் எதிர்கால அரசியல் திசையையும், தெற்காசியப் பிராந்திய அரசியல் சமநிலையையும் தீர்மானிக்கும் முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம் : சீமான் அதிரடி அறிக்கை

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம் :...

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து பொங்கல் திருநாளை...

விரதம் உடலுக்கும் மனதுக்கும் நன்மை அளிக்கும் – அண்ணாமலை பேச்சு

விரதம் உடலுக்கும் மனதுக்கும் நன்மை அளிக்கும் – அண்ணாமலை பேச்சு விரதம் இருப்பதன்...

“பிரதமர் மோடி – அதிபர் டிரம்ப் இடையிலான நட்பு உண்மையானது”

“பிரதமர் மோடி – அதிபர் டிரம்ப் இடையிலான நட்பு உண்மையானது” – இந்தியாவுக்கான...