இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஆயிரக்கணக்கான தற்கொலை தீவிரவாதிகள் தயாராக உள்ளதாக மசூத் அசார் மிரட்டல்
தன்னுடைய பயங்கரவாத அமைப்பில் செயல்படும் ஆயிரத்திற்கும் அதிகமான தற்கொலை தாக்குதல் படையினர், எந்த நேரத்திலும் இந்தியாவை குறிவைத்து தாக்குதல் நடத்தத் தயாராக உள்ளதாக, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் ஆடியோ செய்தி ஒன்றின் மூலம் கடும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முக்கிய முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டது. அந்த தாக்குதலிலிருந்து தப்பிய நிலையில், தற்போது மசூத் அசார் இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், தனது அமைப்பில் உள்ள தீவிரவாதிகள் தங்களைத் தியாகம் செய்ய தயங்காதவர்கள் என்றும், இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த எந்த தருணத்திலும் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.