60 வயது நபரை மணந்த 22 வயது இன்ஸ்டா பிரபலர் – விமர்சகர்களுக்கு நேரடி பதில்
இத்தாலியில், தன்னை விட பல மடங்கு வயதில் மூத்த ஒருவரை திருமணம் செய்ததற்காக எழுந்த விமர்சனங்களுக்கு, இளம் வயது சமூக ஊடக பிரபலர் ஒருவர் கடுமையான பதிலடி அளித்துள்ளார்.
இத்தாலியை சேர்ந்த 22 வயதான இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சர் மினியா பக்னி, தன்னைவிட 42 வயது அதிகமான தனது முன்னாள் பள்ளி ஆசிரியரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை தொடர்ந்து, பலர் மினியாவை “பண ஆசைக்காக திருமணம் செய்தவர்” என விமர்சித்தனர். வயதில் மூத்த நபரை நிதி லாபத்திற்காகவே அவர் மணந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த மினியா பக்னி, தனது கணவரின் அன்பும், பரிவு காட்டும் தன்மையும், நேசத்தை வெளிப்படுத்தும் முறையுமே தன்னை அவரிடம் ஈர்த்ததாக விளக்கினார். மேலும், ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளை பணத்துடன் தொடர்புபடுத்துவது பழமையானதும், மிகுந்த அநீதியான முன்வைப்பாகும் என்றும் கூறி, தன்னை விமர்சிப்பவர்களுக்கு தெளிவான பதிலை அளித்துள்ளார்.