ஆக்ராவில் சட்டவிரோதமாக தங்கிய 38 வங்கதேசவாசிகள் நாடு கடத்தல்
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவின் சிக்கந்திரா பகுதியில் கடந்த 2022 பிப்ரவரியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 வங்கதேசவாசிகள் கைது செய்யப்பட்டனர்.
சட்டப்படி அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தண்டனை காலம் முடிவடைந்தவுடன், பலத்த பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி மேற்கு வங்க மாநிலம் வழியாக வங்கதேச எல்லைக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.