ஈரானில் தொடரும் மக்கள் கிளர்ச்சி – பலி எண்ணிக்கை அதிகரிப்பு
ஈரானில் ஆட்சிக்கு எதிராக வெடித்துள்ள மக்கள் போராட்டங்களில் இதுவரை 70-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை எதிர்த்தும், ஆட்சி மாற்றத்தை வலியுறுத்தியும், கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக ஈரான் முழுவதும் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டங்களை அடக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன், துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளனர். இதனால் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் தீவிரமடைந்து, நிலைமை கட்டுக்கடங்காமல் போயுள்ளது.
பாதுகாப்புப் படைகளின் துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுவதால், பலி எண்ணிக்கை 70-ஐ கடந்திருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது