ஜனநாயகன் பட வெளியீட்டு தாமதம் திமுகவுக்கே சாதகம் – கஸ்தூரி விமர்சனம்
ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான விவகாரத்தில் நடிகர் விஜய் தரப்பில் இருந்து எந்தவிதமான விளக்கமும் அளிக்கப்படாததால், அவர்களை “காணவில்லை” என அறிவிப்பு வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பாஜக நிர்வாகி கஸ்தூரி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,
ஜனநாயகன் பட வெளியீட்டில் ஏற்பட்டுள்ள தாமதம் அரசியல் ரீதியாக திமுகவுக்கே லாபமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், திரைப்படத்திற்கு தொடர்பான பிரச்சனைகளை சென்சார் நிலையிலேயே தீர்த்து வைத்திருந்தால், படம் ஏற்கனவே வெளியானிருக்கும் என்றும் அவர் கூறினார்.
படத்துக்கு தொடர்ந்து சிக்கல்கள் எழுந்தபோதும், நடிகர் விஜய் அல்லது அவரது தரப்பினர் இதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருவது பல கேள்விகளை எழுப்புவதாகவும், அதனால்தான் ‘விஜய் தரப்பினர் காணவில்லை’ என அறிவிப்பே வெளியிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கஸ்தூரி குற்றம்சாட்டினார்.