வளர்ச்சியின் உச்சத்தை நோக்கி அதிவேகமாக நகரும் இந்தியா
உலக அளவில் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக மாறும் இலக்கை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தின் கட்ச் மற்றும் சௌராஷ்டிரா பகுதிகளில் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெற்ற குஜராத் மண்டல வளர்ச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அந்நிகழ்வில் உரையாற்றிய அவர், கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா அடைந்த முக்கிய முன்னேற்றங்களை சுட்டிக்காட்டினார். உலகிலேயே அதிக அளவில் மொபைல் இன்டர்நெட் பயன்படுத்தும் நாடாகவும், UPI டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் முன்னணி நாடாகவும் இந்தியா திகழ்ந்து வருவதாக அவர் கூறினார்.
மேலும், உலகின் இரண்டாவது மிகப்பெரிய மொபைல் போன் உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்த பிரதமர், தடுப்பூசி தயாரிப்பு, ஜெனரிக் மருந்துகள் உற்பத்தி மற்றும் பால் உற்பத்தி ஆகிய துறைகளில் இந்தியா உலகின் முன்னணியில் இருப்பதையும் வலியுறுத்தினார்.