மகனின் நினைவுச் சிலையை குளிரிலிருந்து காத்த தாயின் நெகிழ்ச்சி செயல்
ஜம்முவில் வீர மரணம் அடைந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் நினைவுச் சிலைக்கு குளிர் தாக்காமல் இருக்க போர்வை போர்த்தி பாதுகாத்து வரும் தாயின் செயல்பாடு அனைவரின் மனதையும் உருக வைத்துள்ளது.
ஜம்மு பகுதியின் ரன்பீர் சிங் புரா கிராமத்தைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் குர்னம் சிங், 2016 ஆம் ஆண்டு நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர்த் தியாகம் செய்தார்.
அவரின் வீரத்தைப் போற்றும் வகையில், அவரது சொந்த ஊரில் நினைவுச் சிலை நிறுவப்பட்டுள்ளது. குர்னம் சிங்கின் தாயான ஜஸ்வந்த் கவுர், அந்தச் சிலையை தன் உயிரான மகனாகவே எண்ணி, தினமும் அன்புடன் பராமரித்து வருகிறார்.
தற்போது ஜம்முவில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில், மகனுக்குக் குளிர் பிடிக்கக் கூடாது என்ற தாயின் எண்ணத்தில், அந்தச் சிலைக்கு போர்வை போர்த்தி பாதுகாத்து வருகிறார் ஜஸ்வந்த் கவுர்.
இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், தாயின் அன்புக்கு உலகில் ஈடு எதுவும் இல்லை என பலரும் உணர்ச்சிப்பூர்வமான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.