ஈரானில் பரபரப்பான போராட்டம் – அரசு கட்டடங்களுக்கு தீ, இணைய சேவை துண்டிப்பு
பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து, ஈரானின் தலைநகரில் மக்கள் போராட்டம் தீவிரமாகியுள்ளது. இதற்கிடையில், இணைய சேவைகள் சில பகுதிகளில் துண்டிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், பணவீக்கம், சமீபத்தில் பெட்ரோல் விலை உயர்வு ஆகிய காரணங்களால் ஈரானில் பொருளாதார நெருக்கடி பெரிதாகும் நிலையில், ஈரானிய ரியால் அமெரிக்க டாலருக்கு எதிராக மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இதனால், மக்கள் மற்றும் வியாபாரர்கள், தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் வாயு குண்டுகளை பயன்படுத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நேற்றிரவு, தலைநகரில் பெரும் கூட்டம் வீதிகளில் நடந்தது. அந்த நேரத்தில் சில அரசு கட்டடங்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைப்பு செய்யப்பட்டு அசாதாரண சூழல் ஏற்பட்டது. இதனால் பல பகுதிகளில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.