அமெரிக்காவில் குடியேற்றத்துறை போலீசாரால் பெண் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் – தீவிர போராட்டம்
அமெரிக்காவின் மினசொட்டா மாநிலத்தில் குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ICE) போலீசாரால் 37 வயது ரெனீ நிக்கோல் மேக்ளின் குட் என்ற பெண் தனது குடும்பத்தினர் முன்னிலையில் தலையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.
இந்த நிகழ்வு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, பல்வேறு நகரங்களில் தீவிரமான போராட்டங்கள் மற்றும் பேரணிகள் இடம்பெற்றுள்ளன. போராட்டக்காரர்களை தடுப்பதற்காக அதிகாரிகள் முகங்களில் வண்ண புகை குண்டுகளை வீசியுள்ளார்கள்.
இந்நிகழ்வின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.