ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இயக்குநர் பாலா வழிபாடு!
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் திரைப்பட இயக்குநர் பாலா ஆகியோர் தரிசனம் செய்தனர்.
அவர்கள் சம்பந்த விநாயகர் ஆலயம், அண்ணாமலையார் சன்னதி, உண்ணாமுலை தாயார் சன்னதி உள்ளிட்ட பல்வேறு பிரகாரங்களில் சென்று சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகத்தின் சார்பில் அவர்களுக்கு மாலை அணிவித்து தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் வழங்கி மரியாதை செய்யப்பட்டது.
இந்த நிகழ்வின் போது, கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் பாலாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு உற்சாகம் காட்டினர்.