ரஷ்ய கட்டுப்பாட்டுப் பகுதியில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல் – 24 பேர் பலி
ரஷ்யா கைப்பற்றியுள்ள உக்ரைன் பிரதேசத்தில் உக்ரைன் படைகள் மேற்கொண்ட டிரோன் தாக்குதலில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெர்சன் மாகாணம் தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, கடலோர கிராமமான கோர்லியில் உள்ள ஒரு ஓட்டலை குறிவைத்து உக்ரைன் படைகள் டிரோன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட மொத்தம் 24 பேர் உயிரிழந்ததாக ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்ற இடத்தில் மொத்தம் மூன்று டிரோன்கள் தாக்கியதாகவும், இது பொதுமக்களை குறிவைத்து திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட கவர்னர் வ்லாதிமிர் சால்டோ குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம், ரஷ்யா – உக்ரைன் இடையேயான மோதல் மேலும் தீவிரமடைந்துவருவதை காட்டுவதாகவும், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து உலக நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன.